அன்பார்ந்த பக்தகோடிகள் அனைவருக்கும் வணக்கம்,
மேற்கு- தாம்பரம் சுந்தரம் காலனி பகுதியில் அமைந்துள்ளது நமது ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் இக்கோயிலில் 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆஞ்சநேயர் சுவாமி பிரதான வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இக்கோயிலிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இதன் சிறப்பு. குறிப்பாக வெளிநாடுகளில் வேலை தேடி வரும் பக்தர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். நமது ஆலயத்தில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன்-வள்ளி-தெய்வானை, ஸ்ரீ ராமர்-சீதா, லஷ்மன், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீ துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில்சங்கட சதுர்த்தி, அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திர, கிருத்திகை மற்றும் புனர்பூசம் ஆகிய தினங்களில் அந்தந்த சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை நடைபெறுகிறது. மேலும் சனிக்கிழமை விசேஷ முறையில் பூஜைகள் ஆஞ்சநேயர் மற்றும் ராமர் சன்னதிகளுக்கு நடைபெறுகிறது. தற்போது இக்கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. மேலும் புதியதாக மூன்று நிலை ராஜகோபுரம் தற்போது கட்டப்பட்டு வருகிறது.
நமது ஆலயத்தில் திருவிழா அனுமந் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி, வைகாசி விசாகம் பால் காவடி, கந்தசஷ்டி முருகர் திருக்கல்யாணம், விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி 10 நாள் உற்சவம்
Construction Photos
பக்தர்கள் பொருள் உதவியுடன் மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் நிதியுதவி வழங்கி திருப்பணியை தடையின்றி நடக்க உதவுமாறு
அன்புடன் வேண்டுகிறோம்.
Bank Details*
SRI VARADHA ANJANEYAR TEMPLE
Indian Overseas Bank
West Tambaram Branch
A/c no. 008701000005738
Branch Code: 000087
IFSC Code: IOBA0000087
(used for RTGS and NEFT transactions)
MICR Code: 600020030